FAMOUS TAMIL ASTRO
JYOTISH BEST POINT


Famous Tamil Astro


  • Products
  • About
  • Services
  • Varusa Rasi Palan in Tamil
  • privacypolicy
















ஆண்டு பலன்கள்





*ஆண்டுபலன்கள் * 12 இராசிகளுக்கும் * தெளிவாகக் கணிக்கப்பட்டது



*ஆண்டு பலன்கள் * 12 இராசிகளுக்கும் * தெளிவாகக் கணிக்கப்பட்டது



மேஷம்



மேஷ ராசி





அன்புள்ள மேஷ ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் தருவதாக உள்ளது, நீங்கள் எண்ணியது ஈடேறும், எதிர்பார்த்த வாழ்க்கை அமையும், வாய்ப்புகள் கைவந்து சேரும், கடந்த வருடம் இருந்த தொழில் மந்த நிலைமாறி தொழில் விருத்தி உண்டாகும், லாபங்கள் பெருகும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், குடும்பம் குதூகலம் காணும், அனைவரிடமும் பாராட்டுக்களை பெருவீர்கள், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும், பொருளாதாரம், பணவரவுகள் பெருகுவதால் கடன்களைத் தீர்ப்பீர், எதிர்ப்புகளை வெல்வீர், கௌரவம் அந்தஸ்து உயரும், புதிய நண்பர்களை அடைவீர்கள், பூர்வீகச் சொத்துக்கள் சார்ந்த வகையில் பிரச்சனைகள் தீர்ந்து லாபங்கள் கிடைக்கும், திருமண வாய்ப்புகள் கைகூடும், வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிட்டும், புகழ் கௌரவம் மேம்படும், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் நன்மை தரும், உங்கள் கூட்டாளிகளின் உதவியால் பல ஆதாயங்களை அடைவீர், சகோதரர் வழியிலும் நல்ல உதவிகள் கிட்டும், நவநாகரீக ஆடை அணிகலன்கள் அணிந்து கம்பீரமாக வலம் வருவீர், சுப செலவுகளை செய்து சுகபோகமாக வாழ்வீர், கூடுதலாக முதலீடு செய்வீர், லாபமும் எதிர்ப்பார்த்த அளவுக்கு கிடைக்கும், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், சிலருக்கு புது வீடுகட்டும் யோகம் வாய்க்கும், சிலருக்கு பழைய வீட்டை புதுப்பிக்கவும் நேரும், தூரதேச பயணங்கள், உல்லாச பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு, நிர்வாகத்தில் திருப்திகரம் இருக்கும், தொழில் வளர்ச்சியும் வளமும் காணும், போட்டிகளில் வெற்றி கிட்டும், முதலீடுகளில் பிரயோஜனம் இருக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கு இந்த வருடம் முன்னேற்றமானதாகவே அமையும், மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர், நீங்கள் எதிர்ப்பார்த்த உத்தியோக உயர்வு கிட்டும், திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிட்டும், நீண்ட நாட்களாக அமையாத திருமணங்கள் இந்த வருடத்தில் அமைந்திடும், மொத்தத்தில் இது நல்ல வருடமாக அமையும்.


Famous Tamil Astro

ரிஷபம்



ரிஷப ராசி





அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டு உங்களுக்கு மாற்றங்களைத் தரும் வருடமாக அமையும், தொழில் ரீதியாகவோ இருப்பிட ரீதியாகவோ புதிய மாற்றங்களை செய்வீர், அதன்பின் படிப்படியாக பலவித நன்மைகளை அடைவீர், எண்ணியது ஈடேறும், எதிர்பார்த்த வாழ்க்கை வாய்ப்புகள் கைவந்து சேரும், தொழில்விருத்தி உண்டாகும், லாபங்கள் பெருகும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், குடும்பம் குதூகலம் காணும், அனைவரிடமும் பாராட்டுக்களை பெருவீர்கள், புதிய நபர்களின் நட்பு கிட்டும், உறவினர்களுடன் சுமூகமான உறவு விளங்கும், புகழ் கௌரவம் மேம்படும், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை, பிள்ளைகளிடம் கலகலப்பாக பேசி மகிழ்வீர், சுப செலவுகளை செய்து சுகபோகமாக வாழ்வீர், லாபங்களைக் கொண்டு கடன்களை தீர்ப்பீர், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும், தூரதேச பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு, பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணுவீர், தொழிலதிபர்களுக்கு இந்த வருடம் கூடுதல் முதலீடுகள் செய்யவேண்டியதாக இருக்கும், பிறகு படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்பட்டு லாபங்கள் கிடைக்கும், நிர்வாகத்தில் திருப்திகரம் இருக்கும், போட்டிகளில் வெற்றி கிட்டும், கூடுதல் முதலீடுகள் செய்யவேண்டியிருக்கும் பிரயோஜனமும் இருக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கு இந்த வருடம் சுகமும் லாபமும் உண்டாகும், மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர், நீங்கள் எதிர்ப்பார்த்த உத்தியோக உயர்வு கிட்டும், இடமாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது, நண்பர்களுடன் இனிமையாகப் பழகுவீர், பிரயாணங்கள் அலைச்சல்கள் நேரும், உங்களது கடன் தொல்லைகள் நிவர்த்தியாகும், முன்னேற்றம் காண்பீர்கள், கடினமாக உழைப்பீர்கள், ஆதாயங்கள் கிட்டும், தொழிலை விரிவு படுத்துவீர், பிரயாணங்கள் மேற்கொள்வீர், உங்களுக்கு வெற்றிக்கனி கிட்டும், அறிவாற்றல் பெறுவீர்கள். கௌரவம் அந்தஸ்து, பெருமைகளை அடைவீர்கள், மணமாகாதவர்களுக்கு மணவாழ்க்கை அமையும், குடும்பத்தில் நல்ல அன்யோன்யம் இருக்கும்.


Best Tamil Astrologer

மிதுனம்



மிதுன ராசி





அன்புள்ள மிதுன ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல வருடமாக அமையும், லாபங்கள் கிடைக்கும், பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் மேலோங்கும், உறவினர்களுடன் சுமூகமான உறவு விளங்கும், புகழ் கௌரவம் மேம்படும், சுப செலவுகளை செய்து சுகபோகமாக வாழ்வீர், தொழில் ரீதியான சில மாற்றங்களை செய்வீர், கூடுதலாக முதலீடு செய்வீர், லாபங்களைக் கொண்டு கடன்களை தீர்ப்பீர், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், தூரதேச பயணங்கள், உல்லாச பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு, தொழிலதிபர்களுக்கு படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்பட்டு லாபங்கள் கிடைக்கும், நிர்வாகத்தில் திருப்திகரம் இருக்கும், கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி உண்டாகும், போட்டிகளில் வெற்றி கிட்டும், புதிய யுக்திகளையும் அறிந்துகொள்வீர், விசுவாசமான வேலையாட்கள் அமைவர், அதிர்ஷ்டகரமான ஆதாயங்களையும் அடைவீர், மொத்தத்தில் தொழில் ரீதியாக சில மாற்றங்களைச் சந்தித்தாலும் நல்ல முன்னேற்றங்களையும் லாபங்களையும் அடைவீர். வேலைக்குச் செல்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர், நீங்கள் எதிர்ப்பார்த்த உத்தியோக உயர்வு கிட்டும், சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, அதிலும் நன்மைகள் உண்டாகும், நண்பர்களுடன் இனிமையாகப் பழகுவீர், மொத்தத்தில் இந்த வருடம் மாற்றமும் ஏற்றமும் தருவதாக இருக்கும்.


Best Tamil Astrologer in Salem

கடகம்



கடக ராசி





அன்புள்ள கடக ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றங்களும் உண்டாகும், சிலருக்கு புது வீடுகட்டும் வாய்ப்பும் யோகமும் கிட்டும், சிலருக்கு இடம் விட்டு இடம் மாறக்கூடிய வாய்ப்பு கிட்டும், சுப செலவுகளை செய்வீர், சிலருக்கு தொழில் ரீதியான மந்தநிலையும் பொருளாதார நெருக்கடியும் நேரும், இருப்பினும் இவற்றை சமாளிப்பதற்கான சூழல் உங்களுக்கு அமைந்திடும், போட்டிகளில் சிரத்தையோடு செயல்பட்டு வெற்றி வாய்ப்புகளை அடைந்திடுவீர், புகழ் கௌரவம் கிட்டும், அஷ்டமச்சனி நடைபெறுவதால் முதலீடுகளில் கவனமாக இருக்கவேண்டி வரும், வேலைக்குச் செல்பவர்களுக்கு இந்த வருடம் முன்னேற்றமானதாக அமையும், மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர், நீங்கள் எதிர்ப்பார்த்த உத்தியோக உயர்வு கிட்டும், இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, சக ஊழியர்களுடன் சுமூகமாக பழகுவீர், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைப்பது நல்லது, உறவினர் நண்பர்கள் விஷயத்திலும் எச்சரிக்கையாக இருங்கள், விவசாயிகளுக்கு இந்த வருடம் லாபகரமானதாக அமைந்திருக்கிறது, நல்ல விளைச்சல் காண்பீர்கள், நீண்ட நாட்களாக செய்ய நினைத்த சீர்திருத்தங்களைச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும், கடினமாக உழைப்பீர்கள், சிலருக்கு இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும், பணம் கொடுக்கல் வாங்கலில் சில சிக்கல்கள் உண்டாகும். கவனம் தேவை, தொழிலை விரிவுபடுத்த கடன்களை வாங்குவீர், பிரயாணங்கள் மேற்கொள்வீர், மொத்தத்தில் இந்த வருடம் கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடைவதாக அமையும்.


Best Tamil Astrologer in Tamilnadu

சிம்மம்



சிம்ம ராசி





அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டு பொருளாதார வளமும் குடும்ப அமைதியும் உண்டாகும், புகழ், கௌரவம், அந்தஸ்து உயரும், புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும், கூட்டாளிகளின் ஆதரவில் செய்தொழில் மேன்மை, லாபம் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்கள் சார்ந்த வகையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து லாபங்கள் கிடைக்கும், ஆன்மீக ஈடுபாடு, ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும், பொதுகாரியங்களில் ஈடுபட்டு பெயர், புகழ் அடைவீர். நீண்ட காலமாக செல்ல நினைத்த புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர். குடும்ப நலனுக்காக பாடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர். வீடு நிலம் முதலியவற்றில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வீர், சிலருக்கு புது வீடுகட்டும் வாய்ப்பும் யோகமும் கிட்டும், வருட பிற்பகுதியில் சிலருக்கு இடம் விட்டு இடம் மாறக்கூடிய வாய்ப்பும் தொழில் ரீதியான மந்தநிலையும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல், பொருளாதார நெருக்கடி, கூட்டாளியுடன் மன வருத்தம், ஆரோக்கிய குறைவு, அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் மனஉளைச்சலும் ஏற்பட வாய்ப்புள்ளது, உறவினர் நண்பர்கள் விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிவரும், குடும்பத்தாருடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றும், முன்கோபத்தையும் விவாதங்களையும் தவிர்ப்பது நல்லது. ஆலய வழிபாடு, பூஜைகள் மற்றும் யோகா, தியானம் மேற்கொள்வது நல்ல பலன்களை தரும்.


Famous Tamil Astrologer in Salem

கன்னி



கன்னி ராசி





அன்புள்ள கன்னி ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டில் உங்களுக்கு நீண்ட நாட்களாக எண்ணிய எண்ணங்கள் ஈடேறும், எதிர்பார்த்த வாழ்க்கை வாய்ப்புகள் கைவந்து சேரும், தொழில் விருத்தி உண்டாகும், லாபங்கள் பெருகும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், குடும்பம் குதூகலம் காணும், திருமண வாய்ப்புகள் கைகூடும், வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் நல்ல விதமாக கிட்டும், புகழ் கௌரவம் மேம்படும், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் நன்மை தரும், பிறரிடம் பாராட்டுக்களை பெருவீர்கள், பொருளாதார வளமும் குடும்ப அமைதியும் உண்டாகும், கௌரவம் அந்தஸ்து உயரும், புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும், வீடு நிலம் முதலியவற்றில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வீர், சிலருக்கு புது வீடுகட்டும் வாய்ப்பும் யோகமும் கிட்டும், சிலருக்கு இடம் விட்டு இடம் மாறக்கூடிய வாய்ப்பு கிட்டும், சுப செலவுகளை செய்து சுகபோகமாக வாழ்வீர், சிலருக்கு தொழில் ரீதியான மந்தநிலை நேரும், இருப்பினும் இவற்றை சமாளிப்பதற்கான நல்ல சூழல் உங்களுக்கு அமைந்திடும், இந்த வருடம் லாபங்கள் கிடைக்கும், தொழில் வளர்ச்சிக்காக நிர்வாகத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டியிருக்கும் அதிலிருந்து திருப்திகரமான வளர்ச்சி இருக்கும், போட்டிகளில் சிரத்தையோடு செயல்பட்டு வெற்றி வாய்ப்புகளை அடைந்திடுவீர், புகழ் கௌரவம் கிட்டும், தக்க ஆதாயங்களையும் அடைவீர், மொத்தத்தில் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்களை அடைவீர். வேலைக்குச் செல்பவர்களுக்கு இந்த வருடம் முன்னேற்றமானதாகவே அமையும், உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர், நீங்கள் எதிர்ப்பார்த்த உத்தியோக உயர்வு கிட்டும், இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, சக ஊழியர்களுடன் சுமூகமாக பழகுவீர், பிரயாணங்கள் அலைச்சல்கள் நேரும், ஆனாலும் தக்க ஆதாயங்களையும் அடைவீர்கள், உங்களது கடன்கள் நிவர்த்தியாகும், பொருளாதார வளம் பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், உறவினர் மற்றும் நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள், மற்றபடி இந்த வருடம் ஆதாயங்கள் தருவதாக இருக்கும்.


Famous Tamil Astrologer in Tamilnadu

துலாம்



துலா ராசி





அன்புள்ள துலாம் ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டு உங்களுக்கு ஆதாயங்கள் கிட்டும், லாபங்கள் பெருகும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், குடும்பம் குதூகலம் காணும், அனைவரிடமும் பாராட்டுக்களை பெருவீர்கள், புதிய நபர்களின் நட்பு கிட்டும், சொத்துக்கள் சார்ந்த வகையில் மாற்றங்கள், சீர்த்திருத்தப் பணிகள் நிறைவேற்றுவீர்கள், கூடுதல் தொழில் முயற்சிகள் கைகொடுக்கும், வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் நல்ல விதமாக கிட்டும், நண்பர்களுடன் ஒற்றுமை மேலோங்கும், உறவினர்களுடன் சுமூகமான உறவு விளங்கும், புகழ் கௌரவம் மேம்படும், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் நன்று. அவ்வப்போது சில அசௌகரியங்களை அடைவீர், பிள்ளைகள் வழி அனுகூலங்கள் அதிகரிக்கும், சுப செலவுகளை செய்து சுகபோகமாக வாழ்வீர், தூரதேச பயணங்கள், உல்லாச பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு, பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணுவீர், வாராத கடன்கள் வந்துசேரும். அழியாத சொத்துக்கள் உருவாகும், ஆனந்த வாழ்க்கை உண்டாகும், மொத்தத்தில் இந்த வருடத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் வந்தாலும் திருப்திகரமான பலன்களை அடைந்திடுவீர்.


Top Tamil Astrologer in Salem

விருச்சிகம்



விருச்சிக ராசி





அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டில் உங்களுக்கு எதிர்பார்த்த வாழ்க்கை வாய்ப்புகள் கைவந்து சேரும், தொழில் விருத்தி உண்டாகும், லாபங்கள் பெருகும், இழந்த சொத்துக்களை மீட்டிடுவீர், புதிய வண்டிவாகன யோகம் உண்டாகும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், குடும்பம் குதூகலம் காணும், திருமண வாய்ப்புகள் கைகூடும், வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் நல்ல விதமாக கிட்டும், புகழ் கௌரவம் மேம்படும், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் நன்மை தரும், கூட்டாளிகளிடம் சுமூக உறவு வலுப்பெறும், வீடு நிலம் முதலியவற்றில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வீர், புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் நன்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது, சிலருக்கு புது வீடுகட்டும் வாய்ப்பும் யோகமும் கிட்டும், சிலருக்கு இடம் விட்டு இடம் மாறக்கூடிய வாய்ப்பு கிட்டும், எதிர்ப்பார்த்த பணவரவுகள் கிடைக்கும், சுப செலவுகளை செய்து சுகபோகமாக வாழ்வீர், சிலருக்கு தொழில் ரீதியான மந்தநிலையும் பொருளாதார நெருக்கடியும், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்பார்த்த உயர்வு கிட்டும், இருப்பினும் இவற்றை தக்க முயற்சியால் சமாளிப்பீர், தொழில் செய்பவர்கள் போட்டிகளில் சிரத்தையோடு செயல்பட்டு வெற்றி வாய்ப்புகளை அடைந்திடுவீர், கடுமையான முயற்சிக்குப் பிறகு புகழ் கௌரவம் கிட்டும், முதலீடுகளில் பிரயோஜனம் இருக்கும், வருட முற்பகுதியில் சற்று மந்த நிலை இருந்தாலும் அதை சிரத்தையோடு சரி செய்து சிறப்பான நிலைக்கு கொண்டு வருவீர், கூட்டுத் தொழில்கள் லாபங்களைக் குவிக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கு இந்த வருடம் முன்னேற்றமானதாகவே அமையும், உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர், நீங்கள் எதிர்ப்பார்த்த உத்தியோக உயர்வு கிட்டும், இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, பொருளாதார வளம் பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், சொத்துக்கள் சார்ந்த விதத்தில் சில குழப்பங்கள் தோன்றி மறையும், சிலருக்கு சுகக்குறைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது, ஆனாலும் விரைவில் குணமாவீர், உறவினர் நண்பர்கள் விஷயத்திலும் எச்சரிக்கையாக இருங்கள், மற்றபடி இந்த வருடம் மிகவும் சிறப்பாக இருக்கும்.


Best Tamil Astrologer in Tamilnadu

தனுசு



தனுசு ராசி





அன்புள்ள தனுசு ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டு உங்களுக்கு பலவித யோகங்களையும் மாறுதல்களையும் தரவல்லது. இந்த வருடம் படிப்படியாக முன்னேற்றங்கள் வந்தவண்ணமாக இருக்கும், வெகுவான வளர்ச்சிகளை எதிர்ப்பார்க்கலாம், ஆரோக்கியத்திலும் மேம்படுவீர், வாழ்வில் வளம் காணுவீர்கள். நல்ல அந்தஸ்தையும் உயர்வையும் கொடுக்கும் நல்ல வருடமாக அமையும், பலவித நன்மைகளை அடைவீர், நீண்ட நாட்களாக எண்ணிவந்த எண்ணங்கள் பலிதமாகும், எதிர்பார்த்த வாழ்க்கை வாய்ப்புகள் கைவந்து சேரும், தொழில் ரீதியாக சில மாற்று நடவடிக்கைகளை எடுப்பீர், பொன் பொருள் சொத்து விருத்தி உண்டாகும், லாபங்கள் பெருகும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், குடும்பம் குதூகலம் காணும், அனைவரிடமும் பாராட்டுக்களை பெருவீர்கள், புதிய நபர்களின் நட்பு கிட்டும், அவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டு நன்மைகளை அடைவீர்கள், சொத்து வாங்கும் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள், புதிய கடன் வாங்குவீர். தொழில் முயற்சிகளில் லாபங்கள் கிடைக்கும், பகைவர்களிடமும் சுமூகமான நட்பு ஏற்படும், திருமண வாய்ப்புகள் கைகூடும், வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிட்டும், நேசமும் ஒத்துழைப்பும் காண்பீர்கள், நண்பர்களுடன் ஒற்றுமை மேலோங்கும், உறவினர்களுடன் சுமூகமான உறவு விளங்கும், புகழ் கௌரவம் மேம்படும், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை, உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், பிள்ளைகள் வழி அனுகூலங்கள் உண்டு. லாபங்களைக் கொண்டு கடன்களை தீர்ப்பீர், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும் இடமாற்றம் கிடைக்கும், தூரதேச பயணங்கள், உல்லாச பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு, பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணுவீர், தொழிலில் உயர்வடைய திறமையாக செயல்பட்டு வளர்ச்சியை உண்டாக்குவீர், போட்டிகளில் வெற்றி கிட்டும், உங்களின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நிறைய நற்பலன்கள் கிட்டும், அதிர்ஷ்டகரமான ஆதாயங்களையும் எதிர்ப்பார்த்த மேன்மைகளையும் அடைவீர். வேலைக்குச் செல்பவர்களுக்கு கடுமையாக உழைக்கவேண்டி வரும், நீங்கள் எதிர்ப்பார்த்த உத்தியோக உயர்வை அடைய கடுமையாக பாடுபடுவீர், நீங்கள் எதிர்ப்பார்த்த இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, எதிர்பாராத சில திடீர் அதிர்ஷ்டங்களையும் அடைவீர், சக ஊழியர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமூகமான நட்பு உண்டாகும், நண்பர்களுடன் இனிமையாகப் பழகுவீர், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், சொத்துக்கள் சார்ந்த விதத்தில் நன்மைகள் உண்டாகும், உங்கள் ஆரோக்கியம் மற்றும் சொத்து சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.


Best Tamil Astrologer in Salem

மகரம்



மகர ராசி





அன்புள்ள மகர ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டு உங்களுக்கு நிம்மதியும் ஏற்றமும் தரும். பலவித முன்னேற்றங்களையும் நிம்மதியையும் தருவதாக அமையும், எதிர்பார்க்கும் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும், நீண்ட நாட்களாக எண்ணிய எண்ணங்கள் ஈடேறும், ஆரோக்கியம் மேம்படும், எதிர்பார்த்த வாழ்க்கை வாய்ப்புகள் கைவந்து சேரும், தொழில் விருத்தி உண்டாகும், லாபங்கள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், குடும்பம் குதூகலம் காணும், திருமண வாய்ப்புகள் கைகூடும், வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் நல்ல விதமாக கிட்டும், புகழ் கௌரவம் மேம்படும், தொழில் சார்ந்த விஷயங்கள் நன்மை தரும், பிறரிடம் பாராட்டுக்களை பெருவீர்கள், கௌரவம் அந்தஸ்து உயரும், புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும், சொத்துக்கள் சார்ந்த வகையில் எதிர்ப்புகள் போட்டிகள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும், கூட்டாளிகளிடம் சுமூகமான உறவு இருக்கும். சிலருக்கு வீடுகட்டும் வாய்ப்பும் யோகமோ வீட்டைப் புதுப்பிக்கும் வாய்ப்போ கிட்டும், சிலருக்கு இடம் விட்டு இடம் மாறக்கூடிய வாய்ப்பு ஏற்படும், சுப செலவுகளை செய்து சுகபோகமாக வாழ்வீர், எதிரிகளை ஜெயிப்பீர்கள், அழியாத சொத்துக்களை சம்பாதிப்பீர்கள், தொழில் மற்றும் வாகனம் சார்ந்திருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும், வாழ்வில் முன்னேறுவதற்கான புதிய வழிவகைகள் ஏற்படும், உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், தொழில் செய்பவர்களுக்கு இந்த வருடம் திருப்திகரமான வளர்ச்சிகளையும் காண்பீர்கள். பெரும்பாலும் போட்டிகளில் வெற்றி வாய்ப்புகளை அடைந்திடுவீர், புகழ் கௌரவம் கிட்டும், முதலீடுகளில் பிரயோஜனம் இருக்கும், முன்னேற்றமானதாகவே அமைந்து உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர், நீங்கள் எதிர்ப்பார்த்த உத்தியோக உயர்வு சம்பள உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றங்கள் கிட்டும், நீங்கள் எதிர்ப்பார்த்த மாற்றங்களை செய்து சாதனைகள் புரிவீர், உங்களது கடன்கள் நீங்கும், பொருளாதார வளம் பெருகும்.


Best Tamil Jothidar in Salem

கும்பம்



கும்ப ராசி





அன்புள்ள கும்ப ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டு உங்களுக்கு மாறுதல்கள் தரும் வருடமாக அமையும், நீண்ட நாட்களாக எண்ணிவந்த எண்ணங்கள் இந்த வருடத்தில் நிறைவேறும், தொழில் ரீதியாக ஆதாயங்கள் கிட்டும், லாபங்கள் பெருகும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், அனைவரிடமும் பாராட்டுக்களை பெருவீர்கள், புதிய நபர்களின் நட்பு கிட்டும், சொத்துக்கள் சார்ந்த வகையில் சில இடமாற்றம், சீர்த்திருத்தப் பணிகள் நிறைவேற்றுவீர்கள், கூடுதல் தொழில் முயற்சிகள் கைகொடுக்கும், லாபங்கள் கிடைக்கும், தொழில் முயற்சிக்கு தகுந்த வாய்ப்புகள் கிட்டும், முன்னேற்றம் காண்பீர்கள், நண்பர்களுடன் ஒற்றுமை மேலோங்கும், உறவினர்களுடன் சுமூகமான உறவு விளங்கும், புகழ் கௌரவம் மேம்படும், சிலருக்கு ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை, கூடுதலாக முதலீடு செய்வீர், லாபங்களைக் கொண்டு கடன்களை தீர்ப்பீர், உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடினமாக உழைக்கவேண்டி இருக்கும், பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணுவீர், தொழில் செய்பவர்களுக்கு முதலீடுகள் சார்ந்த விதத்தில் வருட ஆரம்பம் மந்தமாக இருந்தாலும் பிற்பகுதி நன்மைகளும் பிரயோஜனமும் இருக்கும், மொத்தத்தில் தொழில் ரீதியாக பலம் பெற்று வளம் பெறுவீர், வேலைக்குச் செல்பவர்களுக்கு சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, உங்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக சரியாகும், உறவினர் நண்பர்கள் ஆதரவுகள் தக்க சந்தர்ப்பத்தில் கிடைக்கும். ஏழரைச்சனியால் வரும் சில சிரமங்களை தவிர்க்க தக்கவிதத்தில் கவனமாக செயல்படுதல் நலம்.


Best Tamil Jothidar in Tamilnadu

மீனம்



மீன ராசி





அன்புள்ள மீன ராசி நேயர்களே.


2024 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல விமோசன காலமாக அமைந்து தொழில் ரீதியான முன்னேற்றங்களை தருவதாக அமையும், எதிர்பார்க்கும் நற்பலன்கள் கிடைக்கும். நீங்கள் அடைந்த துன்பங்களிலிருந்து விடுதலை அடைகிறீர்கள், நீண்ட நாட்களாக எண்ணிய எண்ணங்கள் ஈடேறும், ஆரோக்கியம் மேம்படும், தொழில் விருத்தி உண்டாகும், லாபங்கள் பெருகும், வாராக் கடன்கள் வந்து சேரும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், குடும்பம் குதூகலம் காணும், திருமண வாய்ப்புகள் கைகூடும், புகழ் கௌரவம் மேம்படும், தொழில் சார்ந்த விஷயங்கள் நன்மை தரும், பிறரிடம் பாராட்டுக்களை பெருவீர்கள், பொருளாதார ரீதியில் லாபங்கள் உண்டாகும், வளமும் சுகமும் குடும்ப அமைதியும் உண்டாகும், கௌரவம் அந்தஸ்து உயரும், புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும், வீடு நிலம் முதலியவற்றில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வீர், சிலருக்கு வீடுகட்டும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு இடம் விட்டு இடம் மாறி நினைத்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும், சுப செலவுகளை செய்து சுகபோகமாக வாழ்வீர், எதிரிகளை ஜெயிப்பீர்கள், கடன்களை கட்டி முடித்து புதிய கடன் வாங்க வேண்டிவரும், வாழ்வில் முன்னேறுவதற்கான புதிய வழிவகைகள் ஏற்படும், உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளில் நலம் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு ஆதாயங்கள் கிட்டும். வேலைக்குச் செல்பவர்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர், நீங்கள் எதிர்ப்பார்த்த உத்தியோக உயர்வு சம்பள உயர்வு கிட்டும். சக ஊழியர்களுடன் சுமூகமாக பழகுவீர், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைப்பது நல்லது, உறவினர் நண்பர்கள் விஷயத்திலும் எச்சரிக்கையாக இருங்கள், விவசாயிகள் மகிழும் வண்ணம் படிப்படியான முன்னேற்றங்களும் லாபங்களும் தருவதாக தொழில் அமைகிறது.


Famous Tamil Jothidar in Salem
Ad: The Best Tnpsc Coaching Centre in Salem!

For consultations. Give me a call



Opening Hours: Monday – Sunday 06:00 am – 09:30 pm


Call: +91-75981-01518

Famous Tamil Astro Jyotish Best Point





Veppilaipatty (Post), Salem, Tamilnadu, India.


Call: +91-75981-01518



Famous Jothida Nilaiyam, Kandhasamy illam,
Nadu kinaru street, Veppilaipatty (Post),
Salem, Tamilnadu, India.



Famous Tamil Astro Jyotish Best Point

Opening Hours: Monday – Sunday

Office Time 09:00 am – 06:30 pm
Online Service: 06:00 - 21.30 (Indian Standard Time)


Call: +91-75981-01518