அன்புள்ள தனுசு ராசி நேயர்களே.
2024 ஆம் ஆண்டு உங்களுக்கு பலவித யோகங்களையும் மாறுதல்களையும் தரவல்லது. இந்த வருடம் படிப்படியாக முன்னேற்றங்கள் வந்தவண்ணமாக இருக்கும், வெகுவான வளர்ச்சிகளை எதிர்ப்பார்க்கலாம், ஆரோக்கியத்திலும் மேம்படுவீர், வாழ்வில் வளம் காணுவீர்கள். நல்ல அந்தஸ்தையும் உயர்வையும் கொடுக்கும் நல்ல வருடமாக அமையும், பலவித நன்மைகளை அடைவீர், நீண்ட நாட்களாக எண்ணிவந்த எண்ணங்கள் பலிதமாகும், எதிர்பார்த்த வாழ்க்கை வாய்ப்புகள் கைவந்து சேரும், தொழில் ரீதியாக சில மாற்று நடவடிக்கைகளை எடுப்பீர், பொன் பொருள் சொத்து விருத்தி உண்டாகும், லாபங்கள் பெருகும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், குடும்பம் குதூகலம் காணும், அனைவரிடமும் பாராட்டுக்களை பெருவீர்கள், புதிய நபர்களின் நட்பு கிட்டும், அவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டு நன்மைகளை அடைவீர்கள், சொத்து வாங்கும் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள், புதிய கடன் வாங்குவீர். தொழில் முயற்சிகளில் லாபங்கள் கிடைக்கும், பகைவர்களிடமும் சுமூகமான நட்பு ஏற்படும், திருமண வாய்ப்புகள் கைகூடும், வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிட்டும், நேசமும் ஒத்துழைப்பும் காண்பீர்கள், நண்பர்களுடன் ஒற்றுமை மேலோங்கும், உறவினர்களுடன் சுமூகமான உறவு விளங்கும், புகழ் கௌரவம் மேம்படும், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை, உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், பிள்ளைகள் வழி அனுகூலங்கள் உண்டு. லாபங்களைக் கொண்டு கடன்களை தீர்ப்பீர், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும் இடமாற்றம் கிடைக்கும், தூரதேச பயணங்கள், உல்லாச பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு, பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணுவீர், தொழிலில் உயர்வடைய திறமையாக செயல்பட்டு வளர்ச்சியை உண்டாக்குவீர், போட்டிகளில் வெற்றி கிட்டும், உங்களின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நிறைய நற்பலன்கள் கிட்டும், அதிர்ஷ்டகரமான ஆதாயங்களையும் எதிர்ப்பார்த்த மேன்மைகளையும் அடைவீர். வேலைக்குச் செல்பவர்களுக்கு கடுமையாக உழைக்கவேண்டி வரும், நீங்கள் எதிர்ப்பார்த்த உத்தியோக உயர்வை அடைய கடுமையாக பாடுபடுவீர், நீங்கள் எதிர்ப்பார்த்த இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, எதிர்பாராத சில திடீர் அதிர்ஷ்டங்களையும் அடைவீர், சக ஊழியர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமூகமான நட்பு உண்டாகும், நண்பர்களுடன் இனிமையாகப் பழகுவீர், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், சொத்துக்கள் சார்ந்த விதத்தில் நன்மைகள் உண்டாகும், உங்கள் ஆரோக்கியம் மற்றும் சொத்து சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.